பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்-ரத்த காயத்துடன் இருப்பது தொடர்பான வீடியோ –இந்தியாவை ஆத்திரம் கொள்ள செய்துள்ளது. ஆனால் அந்த வீடியோ தான்-அவரை காப்பாற்றி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
அபிநந்தன் பயணித்த விமானம் பாகிஸ்தானில் உள்ள கோரன் என்ற கிராமத்தில் விழுந்துள் ளது.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பி.ஓ.கே.) உள்ள இந்த ஊர் –எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. முன்னதாக அபிநந்தன் பாராசூட் உதவியுடன் கீழே குதித்துள்ளார்.
அப்போது இந்த காட்சியை முகமது ரசாக் என்பவர் பார்த்துள்ளார். அவர் அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவாளர் . அவரது வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அபிநந்தன் ஒரு குளத்தில் விழுந்ததை கண்ட ரசாக், தனது நண்பர்கள் சிலருடன் அங்கே சென்றார்.
அவர்களிடம் அபி ‘இது இந்தியாவா? பாகிஸ்தானா? என்று கேட்க ,அந்த இளைஞர்கள் ‘’இது இந்தியா’’ என்று கூறியுள்ளனர்.
இதனால் சந்தோஷம் அடைந்த அபிநந்தன் –இந்தியா ஆதரவு கோஷத்தை எழுப்ப- பின்னரே அவருக்கு தான் விழுந்த பகுதி பாகிஸ்தான் என்று தெரியவந்தது. அவர்கள் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பி, அபியை தாக்கவே– தற்காப்புக்காக அவர் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டுள்ளார் . அவர்களும் அவர் காலில் சுட்டுள்ளனர்.
அவரை அடித்து உதைத்த அந்த கும்பல் –அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியது. பின்னர் அபி , பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை நடக்க விட்டு பாகிஸ்தான் ராணுவமும் வீடியோ எடுத்துள்ளது.
உள்ளூர் கும்பல் எடுத்த வீடியோ மட்டும் வெளியாகி இருக்காவிட்டால் –அபிநந்தன் கைது செய்யப்பட்டதை பாகிஸ்தான் ராணுவம் மறைத்திருக்கும்.
‘அபியா? யார் அவர்? என்று கூறி ஒன்றும் தெரியாதது போல் நாடகம் நடத்தி –அவரை வாழ்நாள் முழுவதும் பாகிஸ்தான் நாட்டு சிறையில் ராணுவம் அடைத்து இருக்கும் என்கிற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வீரரை அவமானம் செய்யும் ,கெட்ட நோக்கத்துடன் பரப்பப்பட்ட வீடியோதான்- அபிநந்தனை காப்பாற்றியுள்ளது.