“வாழப்பாடி யார்”... என்கிற அந்த ஒற்றைச் சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு!

ஒருவர் தவறு செய்து விட்டது தெரிந்தால்.. அவர் ஈஸ்வரனாகவே இருந்தாலும் துணிச்சலுடன் தட்டிக் கேட்ட நெஞ்சுரம்….

கிடைப்பதற்கரிய உயர்ந்த பதவியில் இருந்தாலும், மக்கள் பிரச்சினைக்காக அதைத் தூக்கி எறிந்த அறச்சீற்றம்!

ஏழை எளியோருக்கு உதவுவதாக வாக்களித்து விட்டால்…. கடன் பட்டாவது அவர்கட்கு உதவிய அருங்குணம்!

தான் வரித்துக் கொண்ட தலைவர்களிடம் இருந்த நற்குணங்களைத் தன் மனதில் இருத்தி, அவற்றின்படியே வாழ்ந்த செம்மை….

ஆத்திரம்… கோபம்… அனைத்தும் உச்சம்! ஆனால், அடுத்த நொடியே இளகிய போன இதயம்…!

தான் பிறந்த சமுதாயத்துக்குப் பாதி இடம்.. மற்ற சமுதாயங்களுக்கு மீதி இடம் என்று வகுத்து உதவிய சமத்துவம்…

தன்னைப் பற்றித் தற்பெருமை பேசாத தனிக் குணம்…

இந்த உயர் குணங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்த பெருமகனே தலைவர் வாழப்பாடி யார்!

அவர் வாழ்ந்த காலத்தில், அவருக்கு இணையான தலைவர் அவராகவே இருந்தார்!

இதனால் தான் அவர் மறைந்த இந்த 19ஆவது நினைவு நாளிலும் மக்கள் உள்ளங்களில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களிலேயே உருவத்தில் சிறியவர் வாமனர்!ஆனால் வல்லமையில் அவர் உயர்ந்தவர்!

எனவே, “அவரது மூர்த்தி(உருவம்) சிறிது… ஆனால், கீர்த்தி பெரிது” என்பார்கள்!

ஆனால், “தலைவர் வாழப்பாடியாரின் மூர்த்தியும் பெரிது… கீர்த்தியும் பெரிது” என்கிறார்கள் மக்கள்!

— ஓவியர் இரா. பாரி.