கள்ளச் சந்தையில் மது விற்ற தாசில்தார், சப்-இன்ஸ்பெக்டர்..
’’ 400 ரூபாய்க்கு மதுபானக்கடைகளில் வழக்கமாக விற்கப்படும், சரக்கு பாட்டில் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது’’ என்று புதுச்சேரியில் பல தரப்பில் இருந்து, குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
ஆளுநர் வரை புகார் கடிதங்கள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
அங்குள்ள மதுக்கரை என்ற இடத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
போலீஸ் படை அங்கு விரைந்தது.
விற்பனை செய்த ஆட்களைப் பார்த்ததும் அதிர்ந்து போனது, போலீஸ்.
எல்லாருமே உயர் அதிகாரிகள்.
வேறு வழி இன்றி அந்த அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர்.
கலால் பிரிவு தாசில்தார் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் பார்த்திபன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் அர்ஜுனன்.கான்ஸ்டபிள் ஜெயராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடக்கம்.
‘’ தோட்டம் காக்க போட்ட வேலி பயிரை தின்பதோ?’’ என்ற பாட்டுக்கு , சரியான அர்த்தம் கொடுத்து விட்டார்கள், புதுச்சேரி அதிகாரிகள்.
– ஏழுமலை வெங்கடேசன்