சென்னை: சிகிச்சை முடிந்து வீடு  வீடு திரும்பிய ரஜினிகாந்த், தனது உடல்நிலை குறித்து நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளார்.

நடிகர ரஜினிகாந்த் அக்டோபர் 28ஆம் தேதி தனது குடும்பத்துடன் அண்ணாத்த படத்தை பார்த்த நிலையில் அன்று  மாலை திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட மயமடைந்த  நிலையில் சென்னை யில் உளள  காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது மனைவி லதா கூறிய நிலையில், மருத்துவமனை நிர்வாகம், அவரது ரத்த நாளத்தில் கொழுப்பு அடைப்பு ஏற்பட்டு உள்ள தாகவும், அதை  நீக்குவதற்கான ரத்தநாள மறுசுழற்சி அறுவை சிகிச்சை செய்யப்படுவதாகவும் தெரிவித்தது. மேலும் மற்றொரு அறிக்கை மூலம் அடுத்த சில நாள்கள் ஓய்வுக்குப் பின்னர் ரஜினி வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த்  நேற்று இரவு வீடு திரும்பினார். அவருக்கு அவரது மனைவி லதா ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ஹோட்டி பக்கத்தில், “சிகிச்சை முடிந்தது.  நான் நல்ல இருக்கேன். என்னோட ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் ரசிகர்களுக்கும் நலம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்க்கும் என் மனமார்ந்த நன்றி!” என தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]