சென்னை

சென்னை நகரில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.268 உயர்ந்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் சமையல் எரிவாயு விலை மாதா மாதம் முதல் தேதி அன்று மாற்றி அமைக்கப்படுகிறது.   தற்போது மாதம் ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்ட எரிவாயு விலை தற்போது ஒரே மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த எரிவாயு சிலிண்டர் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் என உள்ளது.  இதில் சிலருக்கு வீட்டு உபயோக சிலிண்டரில் மானியம் உள்ளது.  வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டருக்கு அது இல்லை.

இன்று முதல் தேதி என்பதால் எரிவாயு விலை உயர்வு எதிர்பார்க்கப்பட்டது.  அதில் வீட்டு விநியோக சிலிண்டர் விலையில் மாற்றம் அறிவிக்கப்படவில்லை என்பதால் சென்னையில் ரூ.915.50க்கு விற்பனை ஆக உள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் (19 கிலோ) விலை உயர்த்தப்பட்டுள்ளது.  அதன்படி சென்னையில் ரூ.268 விலை அதிகரித்து தற்போது சிலிண்டர் விலை ரூ.2,133 ஆகி உள்ளது.