ஹீரோவாகிறார் தங்கர் பச்சான் மகன் விஜித் பச்சான்….!

Must read

பி.எஸ்.என் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் தங்கர் பச்சான், தனது மகன் விஜித் பச்சானை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவில், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி கலந்துக் கொண்டு காமிராவை இயக்கி படப்பிடிப்பு துவக்கி வைத்தார்.

இப்படத்தில் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்களுடன் மிலனா நாகராஜ், அஸ்வினி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். டான்ஸ்மாஸ்டர் தினேஷ் , மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா, மற்றும் யோகிராம் ஆகியோர் இதில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார். பிரபு தயாளன், சிவபாஸ்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்ய, சக்தி செல்வராஜ் கலையை நிர்மாணிக்கிறார். ஸ்டண்ட் சில்வா ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.

More articles

Latest article