தஞ்சாவூர்:
ஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது, தேரினை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில். அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதில் இரண்டு 2 சிறுவர்கள் அடக்கம், மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில், மேலும் ஒரு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.