தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறையில் இருந்து ஆவடி எஸ். எம். நாசர் இரண்டு நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்ட நிலையில் தற்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா இன்று காலை ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வகித்து வந்த நிதித் துறை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு தங்கம் தென்னரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் பி.டி.ஆர். கவனித்துவந்த மனிதவள மேம்பாட்டுத் துறையையும் இனி தங்கம் தென்னரசு கவனிப்பார்.

தங்கம் தென்னரசு கவனித்து வந்த தமிழ் வளர்ச்சித் துறையை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூடுதலாக கவனிப்பார்.

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வசம் சென்றுள்ளது அவரிடம் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறை புதிதாக பதவியேற்றுள்ள டி.ஆர்.பி. ராஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.