தெலுங்கில் வெளியாகி ஹிட்டான நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக் அதர்வா நடிப்பில் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள தள்ளி போகாதே.
அதர்வாவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஷண்முக சுந்தரம் காட்சிகள் அமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்த படத்திற்கு எடிட்டர் ஆர்கே செல்வா எடிட்டிங் செய்கிறார்.
இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வரும் அக்டோபர் 9-ம் தேதி காலை 11 மணியளவில் வெளியாகவுள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்தின் ட்ரைலரை வெளியிடுகிறார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைபற்றியுள்ளது.

[youtube-feed feed=1]