மூத்த ஊடகவியலாளர்  ரஃபீக் சுலைமான் அவர்கள் patrikai.com  இதழுக்காக எழுதிய பிரத்யேக கட்டுரை.
யங்கியே என்னிடம் வந்தார்.
“இல்லை… நீங்க மதம் சம்பந்தமாக எழுதியதில்லை என்று தெரியும். இருந்தாலும் ஒரு புரிதலுக்காகக் கேட்கிறேன். ஆமா, இந்த ‘தலாக்’ என்றால் என்ன சார்? ஏன் இன்று அது நாட்டில் பேசுபொருளாக ஆகியுள்ளது? இதைப்பற்றி எழுதினாலோ அல்லது பேசினாலோ உடனே எதிரான கருத்துக்களும் பின்னூட்டங்களுமே வருகிறதே? கேட்கப்படும் என்போன்றோரை வேறு கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறதே… ஏன்?” என்று மிகவும் யோசித்து நிதானமாகவே கேள்வியை வீசினார் நண்பர்.

‘மஹர்’  அளிக்காதது குறித்து  கேள்வி இல்லை..
‘மஹர்’
அளிக்காதது குறித்து கேள்வி இல்லை..

சிரிப்பு மட்டுமே என் பதிலாகக் கொடுத்தேன்.
நம் பிரதமரே இப்போது, “என் முஸ்லீம் சகோதரி படும் துயரைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது.” என்று முழங்குமளவுக்கு விஷயம் விபரீதமாகியுள்ளதே என்று விடாமல் மேலும் அழுத்தம் கொடுத்தார்.
“நமது நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவது சாத்தியமாகுமா? என்று தொடர் கேள்வியும் வந்தது.
முஸ்லீம்கள் இந்த நாட்டின் குடிமக்கள்தான். ஆனால் நம் நாட்டில் முஸ்லீம்கள் மட்டுமல்லாது இன்னபிற மதநம்பிக்கை கொண்டோர்களும் இருக்கிறார்கள். அவரவர்கள் மதநம்பிக்கை சார்ந்த, அந்த சமூகத்திற்குள் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் முன்மொழியும் சட்டத்திற்கு இடமுண்டு என்றும், மூன்றாம் நபர் தலையிடும் விஷயங்களில், உதாரணமாக திருட்டு, கடன், கொலை, கொள்ளை வழிப்பறி இதுபோன்ற விஷயங்களில் பொதுவான கிரிமினல் சட்டங்ககளையே பயன்படுத்த வேண்டும் என்பதுபோலவே நமது இந்தியச்சட்டம் வரையப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
சரி, இப்போது பிரச்சனை என்னவென்றால், ஒரேமூச்சில் மூன்று முறை ‘தலாக்’ என்று சொல்லிவிட்டால் இத்தனை காலம் வாழ்ந்த மனைவியின் எதிர்காலம்,, பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களுக்குரிய வாழ்வாதாரம் இவையெல்லாம் கேள்விக்குறியாகி விடுகிறதே? இது எப்படி ஒரு நீதமான சட்டமாக இருக்க முடியும் என்பதே முன்நிற்கும் மிகப்பெரிய கேள்வி. இதை மேற்கோள்காட்டியே, “முஸ்லீம் பெண்களைக் காப்பது அரசின் கடமை” என்று நம் பிரதமரும் அரசியல் செய்திருக்கிறார்.
மோடியும் அரசியல் செய்திருக்கிறார்...
மோடியும் அரசியல் செய்திருக்கிறார்…

முஸ்லீம் பெண்களை மட்டுமல்ல நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களையும் காப்பது ஒரு அரசின் பொறுப்பு; ஒரு நாட்டின் பிரதமரின் கடமை. அவர்கள் சொல்லித்திரிவதுபோல, ஒரே மூச்சில் மூன்று முறை ‘தலாக்’ சொல்வதற்கு இஸ்லாமும் அனுமதிக்கவில்லையே! குறிப்பிட்ட காலத்தவணையில் காத்திருப்பிற்குப் பிறகே மணவிலக்கு பெறமுடியும் என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது.. காத்திருப்புக்காலத்தில் மணவிலக்குக் கோரும் கணவனால் அந்த பெண் கருவுற்றிருக்கிறாள் என்று அறியப்பெற்றால் அக்குழந்தையின் தகப்பன் இவர்தானென சட்டத்தின் முன் சொல்லமுடியும். அந்தக்குழந்தையின் (வாரிசு) சொத்துரிமை உறுதிசெய்யப்படும். இதனிடையே, மூன்றாம் முறை ‘தலாக்’ சொல்வதற்கு முன் அதாவது இரண்டு முறை முன்பு கூறியிருந்தும் மூன்றாம் முறை சொல்வதற்குரிய கால அவகாசத்தில் மனமாற்றம் ஏற்பட்டு சேர்ந்து வாழ முடிவு செய்துவிட்டால் அவர்கள் சேர்ந்துவாழவும் வழியுண்டு. அதேபோல மனைவி மணவிலக்குக்கோரும்பட்சத்தில், ‘குலா’ எனும் சட்டம் மூலம் உடனடியாகவே பிடிக்காத வாழ்விலிருந்து விடுவித்துக்கொள்ளலாம். யாரிடமும் எந்தக் காரணமும், எந்தவொரு அந்தரங்கத்தையும் சொல்லவேண்டியதில்லை.
அடுத்ததாக, ஒரு இஸ்லாமிய ஆண் இஸ்லாமிய முறையில் மணவிலக்கு கேட்கும் அல்லது அந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது இன்று விவாதப்பொருளாகியிருக்கிறது. ஆனால் அவனது திருமணம் இஸ்லாமிய முறையில் ஏன் நடக்கவில்லை என்பது பற்றி யாரும் கேட்பதில்லை. அவன் ஏன் வரதட்சனை வாங்குகிறான் என்று கேட்கவில்லை. அவனேன் இஸ்லாம் வலியுறுத்தும் ‘மஹர்’ எனும் மணக்கொடை அளித்து திருமணம் முடிக்கவில்லை என்று யாரும் கேட்கவில்லை. (இந்தியாவில் மஹர் என்பது பெரும்பாலானோர் பெயரளவுக்குத்தான் செய்கிறார்கள். ஏனென்றால் மஹர் எனும் மணக்கொடை கொடுக்காமல் மனைவியைத் தொடுதல் கூட கூடாது எனும் சட்டம் இருப்பதால், பத்து கிராம் அல்லது இருபது கிராம் அல்லது நாற்பது கிராம் தங்கம் என்று மட்டும் கொடுத்துவிட்டு கடமையை முடித்துவிடுகிறார்கள்.)
மூன்றாம் நபர் தலையிடும் விஷயங்களில் பொதுவான கிரிமினல் சட்டங்ககள்…
மூன்றாம் நபர் தலையிடும் விஷயங்களில் பொதுவான கிரிமினல் சட்டங்கள்…

மாப்பிள்ளை அமைவது என்பது மகாராஜா அமைவது போன்றதொரு பிம்பம் நம் இந்திய இன்னும் குறிப்பாக தமிழ்ச்சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளதால், மாப்பிள்ளை(வீட்டார்) அதிகாரம்தான் அதிக காரமாக இருக்கும்! பெண்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். இஸ்லாம் வலியுறுத்தும் மணக்கொடை பெணகளுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அதிகாரம். அவர்கள் நிர்ணயிப்பதுதான் எல்லை. இதை (இந்திய) இஸ்லாமியப் பெண்களேகூட அறிந்திருக்கவில்லை எனும்போது பாமரர்களின் நிலையோ பரிதாபம்.
நம்நாடுகளில் வரதட்சனைக் கொடுமைகளால் நம்நாட்டில் முதிர்கன்னி எனும் அவல நிலை இருக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் நன்கு படித்த, அந்தஸ்திலுள்ள பெண்களை மணம்முடிக்க அவர்கள் கோரும் ‘மஹர்’ எனும் மணக்கொடை கொடுத்துத் திருமணம் முடிக்க முடியாமல் ஆண்கள் இருக்கிறார்கள். அல்லது படித்த, அந்தஸ்திலுள்ள பெண்ணைத் திருமணம் முடிக்க நீயும் படித்தவனாக, பொருளீட்டி குடும்பத்தை வழிநடத்துபவனாக இருக்கவேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது. திருமணத்திற்குப் பிறகும் மனைவியின் முதலீட்டில், பொருளாதாரத்தில் தொழில் தொடங்கி நடத்தினால் கணவனின் முதலீட்டிற்கேற்ப பங்குதாரராகவோ அல்லது அந்நிறுவனத்தில் ஒரு ஊழியராகவோ பணிபுரிவதை இங்கு பார்க்கலாம்.
கட்டுரையாளர்  ரஃபீக் சுலைமான்
கட்டுரையாளர் ரஃபீக் சுலைமான்

ஒரு முஸ்லீம் தனது உழைப்பின் மூலம் பொருளீட்டி, உடல்வலிமை கொண்டவனாக இருந்தால் மட்டுமே திருமணத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அந்நிலையில் இல்லாதவர் நோன்பு நோற்று தமது கற்பைக் காத்துக்கொள்ளவும் அறிவுறுத்துகிறது.
திருமணத்தின்போதே வரதட்சனை சுமையின்றி, மணக்கொடை பெற்று தனது சுயம்சார்ந்து இருக்கும்படியான வழியினை இஸ்லாம் கற்றுத்தந்திருக்கும்போது ஜீவனாம்சம் எனும் பேச்சுக்கேது இடம்? எனவே இந்தியாவில் திருத்தப்பட வேண்டியது ‘தலாக்’ எனும் இறைவழிச் சட்டத்தையல்ல. சாட்டைகொண்டு திருத்த வேண்டியது இறைவன் சொன்ன ‘மஹர்’ இன்றி ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களையும், மனங்களை இணைப்பதற்கு விலைபேசும் வீணர்களையும்தான்! செய்யுமா நம் அரசு? கேள்வியை முன் வைத்தேன்.
“இதை அனைவரும் புரிந்துகொள்ளச் செய்வது நம் கடமைதான்” என்று புன்னகைத்துவிட்டு நன்றி கூறி விடைபெற்றார்.