
விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் முதன்முதலாக, ‘துப்பாக்கி’ படத்தில் இணைந்தார்கள். பின் ‘கத்தி’ ‘சர்கார்’ என மூன்று வெற்றிப்படங்களை கொடுத்தனர் .
இந்நிலையில் அடுத்து ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கிறது. இது, ‘துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகம் என்று பேசப்படுகிறது.
இந்நிலையில் ஜூன் 22ஆம் தேதி தளபதி பிறந்தநாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்தை பற்றிய செய்திகளை வெளியிட முடிவு செய்துள்ளது.
மேலும் படத்தின் பூஜையை டிசம்பர் மாதத்தில் வைத்துள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தான் தற்போது தளபதி ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது.
[youtube-feed feed=1]