ரஜினிகாந்தின் 74-வது பிறந்த நாளையொட்டி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி, கடந்த 1991-ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி நடித்து வெளியான தளபதி திரைப்படம் இன்று மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை உள்ளிட்ட பல ஊர்களில் இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக திரண்டு வந்து ரஜினிகாந்த் பிறந்தநாளை தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாடினர்.

சென்னையில் மழையையும் பொருட்படுத்தாமல் படம்பார்க்க வந்த ரசிகர்கள் 33 ஆண்டுகள் பின்னாடி போன மாதிரி இருந்ததாக பீலிங் விட்டதுடன் இருக்கையில் உட்காராமல் நடனமாடினர்.