விஜய் & அட்லி மூன்றாவதாக கூட்டணி அமைந்து இணைந்திருக்கும் படம் விஜய்யின் 63வது படமாகும். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் தளபதி 63 படம் தன்னுடையது என குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா நீதிமன்றத்தில் முறையிட்ட போது திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் முறையிட கூறியுள்ளனர்.

ஆனால் அங்கு முறையிட்டதற்கு சங்கத்தில் 6 மாதத்திற்கு மேல் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் கதை திருட்டு என புகார் தெரிவிக்க முடியாது என கூறி தன்னுடைய புகாரை நிராகரித்ததாக தெரிவித்திருந்தார் செல்வா.

எனவே ‘தளபதி 63’ படத்தின் கதைக்கு உரிமை கோரியும், படப்பிடிப்புக்கு தடை விதிக்கக் கோரியும், இயக்குநர் அட்லீ, ஏ.ஜி.எஸ் படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் ஆகியோரை எதிர்மனுதாராக சேர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

[youtube-feed feed=1]