ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் இயக்கியுள்ளார். ஜெயலலிதாவாக கங்கனா ரனவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.

இதில் அரவிந்த் சாமியுடன் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு மிக நெருங்கிய நண்பரான ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை . விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். தலைவி படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகியிருக்க வேண்டிய படம் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளியாகாமல் தள்ளிப் போனது. செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்த படம்.

தற்போது இந்த படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு ட்ரைலரையுடன் அறிவித்துள்ளனர்.