சென்னை: மேல்மருத்துத்தூரில் தை மாதம் நடைபெற உள்ள இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூர் வழியாக ரயில்கள் அனைத்தும் மேல்மருத்துவர் ரயில் நிலையத்தில் இருமார்க்கமாக தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆண்டுதோறும் இருமுடி மற்றும் தைப்பூசத் திருவிழா தொடா்ந்து இரு மாதங்கள் நடைபெறும். அதன்படி நடப்பாண்டு, டிச.15 முதல் பிப்.12-ஆம் தேதி வரை தைப்பூசத் திருவிழா நடைபெறவுள்ளது.
இந்த திருவிழாவில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் மேல்மருவத்தூர் வந்து அம்மனை தரிசித்து செல்வாக்ரள். இதற்காக, சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் மாா்க்கமாக செல்லும் விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் இரு நிமிஷங்கள் நின்று செல்ல ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , சென்னை எழும்பூர் – திருச்சிக்கு டிச.14 முதல் பிப்.11-ம் தேதி வரை இயக்கப்படும் மலைகோட்டை விரைவு ரயில் (12653), சென்னை எழும்பூர்-மதுரைக்கு டிச.15 முதல் பிப்-12-ம் தேதி வரை இயக்கப்படும்.
பாண்டியன் விரைவு ரயில் (12637), சென்னை எழும்பூர்- செங்கோட்டைக்கு டிச.15 முதல் பிப்.12 ம் தேதி வரை இயக்கப்படும் பொதிகை விரைவு ரயில் (12661), சென்னை எழும்பூர் – மன்னார்குடிக்கு டிச.14 முதல் பிப்.11-ம் தேதி வரை இயக்கப்படும் மன்னை விரைவு ரயில் (16179), தாம்பரம் – நாகர்கோவிலுக்கு டிச.15 முதல் பிப்.12-ம் தேதி வரை இயக்கப்படும்
அந்த்யோதயா விரைவு ரயில் (20691), சென்னை எழும்பூர் – கொல்லத்துக்கு டிச.15 முதல் பிப்.12-ம் தேதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் ( 16101), சென்னை எழும்பூர் – தஞ்சாவூருக்கு டிச.15 முதல் பிப்.12-ம் தேதி வரை இயக்கப்படும் உழவன் விரைவு ரயில் (16865), பனாரஸ் – ராமேஸ்வரத்துக்கு டிச.15 முதல் பிப்.9-ம் தேதி வரை இயக்கப்படும்
விரைவு ரயில் (22536), புவனேஸ்வர் – ராமேஸ்வரத்துக்கு டிச.20 முதல் பிப்.7-ம் தேதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் (20896), லோக்மான்ய திலக் டெர்மினஸ் – மதுரைக்கு டிச.18-ம் தேதி முதல் பிப்.5-ம் தேதி இயக்கப்படும் விரைவு ரயில் (22101), எழும்பூர் – நாகர்கோவிலுக்கு டிச.19 முதல் பிப்.9-ம் தேதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் (12667) உtபட 23 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக 2 நிமிடம் நின்று செல்லும்.
இதேபோல், மறுமார்க்கமாக 25 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.