தாய்லாந்து நாட்டில் ஒரே பாலின திருமண சட்டம் ஜனவரி 23ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
கடந்த ஜூன் மாதம் தன்பாலின திருமணத்துக்கு தாய்லாந்தின் செனட் சபை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அந்த மசோதா, மன்னர் மகா வஜிரலங்கோனின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டது.
தைவான் மற்றும் நேபாளத்தை தொடர்ந்து ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்த மூன்றாவது ஆசிய நாடாக தாய்லாந்து இடம்பெற்றுள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் முதல் நாடாக தாய்லாந்து தன்பாலின திருமணத்தை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அங்கீகாரத்தை அடுத்து நேற்று சுமார் 300 ஜோடிகள் தன்பாலின திருமணம் செய்து கொண்டு உற்சாகம் கரைபுரண்டது.