சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நல்லக்கண்ணு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு பதவி ஏற்றதும், ஆண்டுதோறும் சுதந்திரத்தினத்தன்று, தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் மாபெரும் பங்காற்றிய வர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, `தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருது வழங்கப்படும் என அறிவித்தார். இந்த விருதுடன் பாராட்டுச் சான்றிதழும், பரிசுத்தொகையாக பத்து லட்ச ரூபாய் காசோலையும் கையளிக்கப்படும் என தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த 2021ம்ஆண்டு, மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு (2022) தமிழ்நாடு அரசின் `தகைசால் தமிழர்‘ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நல்லக்கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, தகைசால் தமிழர்’ விருது அறிவித்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, முத்தரசன் உள்பட மூத்த கம்யூனிஸ்டு தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு…