மதுரை: ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உறுதி செய்துள்ளது.

கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில்,  மத்தியஅரசு முதலில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை  ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வைக்கப்பட்டு, தேர்ச்சி பெற வேண்டும் என  அறிவித்தது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பின்னர்,  ஒருமுறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலே, அவர்களின் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள்வரை செல்லும் என நீட்டித்து  அரசாணை வெளியிட்டது.

மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு,  டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களே மட்டுமே பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து பல ஆசிரியர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்ற மதுரை கிளை  பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்  என்று உறுதி சய்துள்ளது.

அதன்படி, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்  டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும்,   டெட் தகுதித் தேர்வு தேர்ச்சி என்பது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் என குறிப்பிட்டுள்ளதுடன்,   கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும்  தெரிவித்துள்ளது.