சென்னை:

சுமார் 8 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தும், ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வை எழுதாத தனியார் பள்ளி  ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது என்றும், அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும்  சென்னை உயர்நீதி மன்ற தனி நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு தடை விதித்த நீதிமன்றம்,  அவர்கள்மீது வேறு ஏதும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது.

மேலும்,  தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் ஜூன் மாதம் நடைபெறும் தகுதித் தேர்வில் பங்கேற்க நீதிபதிகள் உத்தரவிட்டு,  விசாரணையை  ஜூன் 2வது வாரத்திற்கு ஒத்தி வைத்தது

இந்த நிலையில், பணிநீக்கம் செய்யும் உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் தகுதியற்ற ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில், பள்ளிகளுக்கு ஆசிரியர்கள்  டெட் தேர்வு மூலமே நிரப்பப்பட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கு மத்தியஅரசு கடந்த 2012ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. இதை உச்சநீதி மன்றமும் உறுதி செய்துள்ளது.

இதைடுத்து, தமிழகத்தில் பணியாற்றி வந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், சுமார் 8 ஆண்டுகள் முடிந்தும்  சுமார் 1500 ஆசிரியர்கள் பலமுறை தேர்வுகள் எழுதியும் தேர்ச்சி பெற முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்ச்சி பெறாத  1500 ஆசிரியர்களுக்கும் சம்பளத்தை நிறுத்த சென்னை உயர்நீதி மன்ற தனி நீதிபதி அதிரடி உத்தரவிட்டார். இது ஆசிரியர்கள் மத்தியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனி நீதிபதியின்  தீர்ப்பை எதிர்த்து,   100க்கும்  ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்., அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட  நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது.

விசாரணையை தொடர்ந்து,  தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதி மன்றம், அவர்கள் அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.