பெங்களூரு

லகில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவருடன் தொடர்பில் இருந்தோருக்கு சோதனை நடந்துள்ளது.

உலகெங்கும் வேகமாகப் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பாதிப்பு இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இருவருக்குக் கண்டறியப்பட்டுள்ளது.  இதையொட்டி அவர்கள் இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.  உலகில் உள்ள 27 நாடுகளில் சுமார் 226 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாதிப்பு கண்டறியப்பட்ட இருவரும் தென் ஆப்ரிக்காவில் இருந்து கர்நாடகாவுக்கு வந்துள்ளனர்.   கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வையொட்டி இந்த இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தப்படும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. 

அவ்வகையில் இதுவரை மூவர் நேரடி தொடர்பிலும் 205 பேர் மறைமுக தொடர்பிலும் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இதில் இதுவரை 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் போட்டுக் கொண்டவர்கள் என்பதால் பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.