புதுடெல்லி:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கியின் சோதனை வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நீண்ட தூர இலக்கை அழிக்கும் மேம்படுத்தப்பட்ட உயர்ரக ஏ.டி.ஏ.ஜி.எஸ். பீரங்கி வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட பீரங்கியை தயாரித்து உள்ளது. டாடா மற்றும் பாரத் போர்ஜ் நிறுவனங்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட பீரங்கி பொக்ரானில் சோதித்து பார்க்கப்பட்டது.
பீரங்கியில் இருந்து சென்ற குண்டுகள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தன. சுவீடன் தயரிப்பு Bofors பீரங்கிகளுக்கு மாற்றாக இந்திய ராணுவத்தில் ஏ.டி.ஏ.ஜி.எஸ். பீரங்கி முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.