அடுத்தாண்டில் இந்தியாவிற்குள் வருகிறது டெஸ்லா எலெக்ட்ரிக் வாகனம்!

Must read

சென்னை: அடுத்தாண்டில், கூடிய விரைவில், முதல் டெஸ்லா எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டெஸ்லா முதன்மை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

‘SpaceX Hyperloop Pod Competition 2019’ போட்டியின் இறுதி நிகழ்ச்சி சமீபத்தில் நிகழ்ந்தது. இந்த நிகழ்வின்போது, சென்னை ஐஐடி மாணாக்கர்களிடையே உரையாற்றியபோது இதை தெரிவித்தார் டெஸ்லா முதன்மை நிர்வாக அதிகாரி.

எலோன் மஸ்கிடம், டெஸ்லா எலெக்ட்ரிக் வாகனம் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஐஐடி மாணாக்கர்கள் கேட்டதற்கு இவ்வாறு பதிலளித்தார் எலோன் மஸ்க்.

அவிஷ்கார் ஹைபர்லூப் என்று பட்டம் சூட்டப்பட்ட ஐஐடி சென்னையின் அணிதான், ஜுலை 21ம் தேதி லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்த இறுதிப்போட்டியில் பங்கேற்ற ஒரே ஆசிய அணியாகும்.

இந்த அணியை வழிநடத்திச் சென்றவர் மெக்கானிக்க்ல இன்ஜினியரிங் பிரிவில் எம்.டெக் இரண்டாமாண்டு படிக்கும் சுயாஷ் சிங் என்ற மாணவர். ஜெர்மனியின் மியூனிச் நகரின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அணிதான் இப்போட்டியில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article