சென்னை

சென்னை கோயம்பேட்டில் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அனோவர் என்ற பயங்கராவதி உபா சட்டத்தில் தேடப்பட்டு வந்தவர் ஆவார்  இன்று பயங்கரவாதி அனோவர் கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அனோவர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்

இவர் அன்சார் அல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்காளத்தில் இருந்து தலைமறைவாகி சென்னையில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த அனோவரை மேற்கு வங்காள காவல்துறையினர் கைது செய்தனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஹபிபுல்லா என்ற பயங்கரவாதி கொடுத்த தகவலின் பேரில் அனோவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அரசுக்கு எதிராக சட்ட விரோத செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அனோவர் மீது வழக்குகள் உள்ளன.

மேற்கு வங்காள காவல்துறையினர் கைது செய்யப்பட்ட அனோவரை கொல்கத்தாவிற்கு அழைத்து செல்வதற்கான நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளனர்.