போபால்-

மத்திய பிரதேசம் ரெயில் குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ரெயிலில் குண்டு வெடித்ததில் தொடர்புடைய ஐ.எஸ். பயங்கரவாதி முகமது சைபுல்லை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சுட்டுக் கொன்றனர்.

முகம்மது சைபுலை சுற்றி வளைத்த பயங்கரவாத தடுப்பு படை அவனை சரண் அடையுமாறு கேட்டது. ஆனால் அவன் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினான். சுமார் 12 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி முகமது சைபுல் கொல்லப்பட்டான். இவன் ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புடையன் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

தீவிரவாதி முகமது சைபுல் கொல்லப்பட்ட அறையில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், கத்திகள் என பல்வேறு ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் குண்டுவெடிப்பு தாக்குதலானது வெறும் ஒத்திகைதான் என்றும் நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளனதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக 9-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

அவர்கள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தீவிரவாதிகள் நாடு முழுவதும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு மாதத்தில் பல்வேறு இடங்களில் கொடூரத் தாக்குதலை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்து உள்ளனர் என விசாரணை அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.