அடப்பாடி:
கேரளாவின் அடப்பாடி பகுதியில் அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி இளைஞனை அந்த பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று அடித்து உதைத்து, செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட அந்த ஆதிவாசி இளைஞன் மருத்துவமனை அழைத்து செல்லும் வழியில் மரணமடைந்தார். இதுகுறித்து போலுசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளத்தின் அடப்பாடி பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க மது என்ற ஆதிவாசி இளைஞன், அந்த பகுதி மக்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
அரிசி திருடியாக அவரின் கைகளை கட்டி அடித்து உதைத்தும், அவர் முன்னிலையில் செல்பி எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொடுமை படுத்தி உள்ளனர்.
பொதுமக்களிடம் இருந்து அந்த பழங்குடி இளைஞரை மீட்ட காவல்துறை, அவரை மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்து சென்றபோது, வழியிலேயே அவர் மரணம் அடைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின், அடப்பாடி காட்டுப்பகுதியில் வாழ்ந்து வந்த மது என்ற பழங்குடி இளைஞரை, அந்த பகுதி மக்கள் அரிசி திருட்டில் ஈடுபட்டதாக கூறி தாக்குதல் நடத்தி, அது குறித்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.
அதில், அந்த இளைஞன் கைகள் கட்டப்பட்ட நிலையில், ஒருவர் செல்பி எடுப்பது போன்ற போட்டோவும் பதிவேற்றப்பட்டு பகிரப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினரும், காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய அகாலி பகுதி துணை காவல் கண்காணிப்பாளர் , அந்த இளைஞன் மீது ஏற்கனவே 3 திருட்டு வழக்குகள் உள்ளதாகவும், அவன் இரவில் அந்த பகுதி வீடுகளில் புகுந்து அரிசி திருடி வந்துள்ளதாக வும்,கடந்த செவ்வாய்க்கிழமை அந்த அதிவாச இளைஞன் கல்கண்டா பகுதியில் உள்ள கடையில் இருந்து அரிசி திருடி சென்றதாகவும், அவரை தேடி சென்ற அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவனை பிடித்துக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தி உள்ளனர் என்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அங்கு சென்று அந்த ஆதிவாசி இளைஞனை மீட்டு, ஜீப்பில் ஏற்றிக்கொண்டு காவல்நிலையம் அழைத்து வரும்போது, வரும் வழியில் தொடர்ந்து வாந்தி எடுத்து சுயநினைவு இழந்துவிட்டதாகவும், அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார் என்றும் கூறினார்.
மேலும், அவரது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவரது மரணம் குறித்து தெரிய வரும் என்றும் கூறினார்.
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் ஆதிவாசி இளைஞன் ஒருவர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.