ரியாத்,

ஜண்டுகளால் ஏமாற்றப்பட்டு சவூதியில் ஒட்டகம் மேய்க்கும் தமிழக வாலிபர் ஒருவர், தன்னை  மீட்கக்கோரி கண்ணீருடன் வாட்ஸ்அப்பில் வேண்டுகோள்

இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரபு நாடுகளுக்கு செல்லும் பலர், சரிவர விசாரிக்காமல் ஏஜண்டுகளின் ஏமாற்று வார்த்தைகளை நம்பியும், அதிக சம்பளம் கிடைக்கும் என ஆசையாலும் சென்று அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் பலமுறை எடுத்துக்கூறியும், இன்னும் இந்த சோகங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

சமீபத்தில் சவூதிக்கு சென்ற இளைஞர் ஒருவர் தான் ஏஜண்டுகளால் ஏமாற்றப்பட்டு, தன்னை ஒட்டகம் மேய்க்கச்சொல்லி கொடுமைப்படுத்துவ தாகவும், தன்னை எப்படியாக காப்பாற்றும்படியும்  கண்ணீருடன் வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

திருச்சி பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவர் வாட்ஸ்அப் மூலம் தான் குவைத்தில் அவதிப்படுவதை கண்ணீரோடு விவரித்துள்ளார்.

திருவாரூர் அருகே உள்ள சேந்தாமொழி பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவர் சவூதி அரேபியாவில் வீட்டு வேலைக்காக தன்னை சவூதி அனுப்பியதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் சத்யராஜ் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், விமானம் ஏற திருச்சி விமான நிலையம் வந்தபோது, எனக்கு விசாவை கொடுத்தவர்கள் ரத்திக் மற்றும் லத்தீப் என்று கூறினார்.

தான் சவூதி வந்தபோது,  தன்னை வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லாமல் நேரடியாக அழைத்துச் சென்று ஒட்டகம் மேய்க்க விட்டுவிட்டார்கள் என்று அழுதுகொண்டே கூறினார்.

மேலும், தன்னை தனது ஓனர் அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், இதன் காரணமாக தனது ஒருபக்க காது வேலை செய்யவில்லை என்றும், நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றும் நாளைந்து நாளாக சாப்பிட வில்லை என்றும் ஒருநாளைக்கு ஒருவேளை சாப்பாடு போட்டு என்னை கொடுமைப்படுத்துகிறார்கள் என்றார்.

அவர்களிடம் இருந்து நான் தப்பித்து தற்போது ரியாத் வந்திருப்பதாகவும், தற்போது தமிழ் நண்பர் ஒருவரின் அறையில் பதுங்கி இருப்பதாகவும், தனது பாஸ்போர்ட் ஓனரிடம் சிக்சி இருப்பதால் தன்னால் நாட்டுக்கு திரும்ப முடியவில்லை என்றும் கூறினார்.

மேலும் தான் நிறைய நாட்கள் அவருடைய அறையில் இருக்க முடியாது என்றும், தனது நண்பரின் எண்ணுக்கு தகவல் தெரிவித்து, தன்னை இந்தியா வுக்கு திருப்பி அனுப்ப முயற்சி மேற்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் தான் இந்த நிலைமைக்கு ஆளாக காரணம்  லத்தீப், ரத்திக் ஏமாற்றினார். இங்கிருந்தால் தான் செத்துபோவேன் என்றும், எனது நிலைமை குறித்து எனது பெற்றோருக்கும், போலீசுக்கும் தகவல்கள் தெரிவித்து, என்னை எப்படியாவது காப்பாத்துங்க…  என்று கண்ணீரோடு அவர் கூறும் வாட்ஸ்அப் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ….