சென்னை:
10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவங்குகிறது.

4025 மையங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வில் மொத்தம் 9,76,089 மாணவர்கள் எழுதுகின்றனர்.

இதில் 5,01,028 மாணவர்கள், 4,75,056 மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் மொழிப்பாட தேர்வு நடைபெற இருப்பதை அடுத்து மாணவர்களின் வருகை குறித்து அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்வு எழுத 50,000 பேர் வராதது குறித்து பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேர்வு எழுதுவதில் சலுகை பெற்ற மாணவர்கள் முதல்முறையாக தேர்வு எழுத அச்சமடைந்தது தெரியவந்தது.