அன்புமணியை டென்ஷன் ஆக்கிய மூன்று கேள்விகள்..!

Must read

ரவுண்ட்ஸ்பாய்
1
பா.ம.கட்சியோட தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை அண்ணா சாலையில இருக்கிற ரெய்ன் ட்ரீ அப்படிங்கற நட்சத்திர ஓட்டல்ல நடந்துச்சு.
“சும்மா போயிட்டு வா”ன்னு எடிட்டர் சொன்னார்.
தேர்தல் அறிக்கையை வெளியிடறதுக்கு முன்னாடி, அதில இருக்கிற அறிவிப்புகளை, பக்கம் விடாம படிச்சு பத்திரிகைகாரங்க பொறுமையை சோதிச்சார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். அப்புறம் பத்திரிகைக்காரங்க கேள்விகளை கேட்டாங்க.
“கல்விக்கு இத்தனை சதவிதக நிதி ஒதுக்கி இருக்கீங்களே…  சுகாதாரத்துக்கு அத்தனை சதவிகித நிதி ஒதுக்கி இருக்கீங்களே” அப்படின்னு… ஏதோ பா.ம.க. நிச்சயம் ஆட்சிய புடிச்சிரும்கிற மாதிரி கேள்விகள் வந்து விழுந்துச்சு.
அன்புமணியும், தான் முதல்வர் ஆயிட்ட தோரணையிலேயே பதில் சொல்லிகிட்டு இருந்தாரு.
அப்பத்தான் எனக்கு ஒரு கேள்வி தோணுச்சு. அன்புமணிய பாத்து, “நிச்சயமா ஜெயிச்சிருவீங்கனு  நம்பிக்கையில இருக்கீங்க.. அப்படின்னா இப்போ வகிக்கிற தர்மபுரி எம்பி. பதவியை ராஜினாமா செஞ்சிடலாமே…”னு கேட்டேன்.
“டக்”குனு மூஞ்சி சுருங்கிப்போச்சு அன்புமணிக்கு. சில விநாடி யோசிச்சவரு, “அதையெல்லாம் தேர்தலுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்”னு சுருக்கமா சொல்லிட்டு, அடுத்தடுத்து வந்த கேள்விகளுக்கு விரிவா பதில் சொல்ல ஆரம்பிச்சிட்டாரு.

ரவுண்ட்ஸ்பாய்
ரவுண்ட்ஸ்பாய்

கொஞ்ச நேரம் கழிச்சு நான், “தேர்தல் அறிக்கையில நிறைய திட்டங்கள் சொல்லியிருக்கீங்க. கலப்பு திருமணம் செய்யறவங்களுக்கு அளிக்கப்படற அரசு நிதியை அதிகரிக்க போறதா தி.மு.க. சொல்லியிருக்கு.  அதுபத்தி நீங்க எதுவும் சொல்லிலயே”னு கேட்டேன்.
அன்புமணி மவுனமா இருக்க.. குறுக்கே புகுந்த ராமதாஸ், “கலப்பு திருமணம் தமிழ்நாடு முழுக்க நடந்துகிட்டுத்தான் இருக்கு. அதான் அதப்பத்தி சொல்லலே”னு சுருக்கமா பதில் சொன்னாரு. இப்பவும் அன்புமணி, ராமதாஸ் ரெண்டுபேரும் டென்சன் ஆன மாதிரித்தான் இருந்துச்சு.
அடுத்தாத பலப்பல கேள்விகள வந்து விழுந்துச்சு.  விரிவா பதில் சொன்னாங்க ரெண்டு பேரும்.
கடைசியா நான், “வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை நீங்க ரெண்டு பேரும் கடுமையா விமர்ச்சி பல முறை பேசியிருக்கீங்க. ஆட்சிக்கு வந்தா அந்த சட்டத்தை நீக்கிடுவீங்களா”னு கேட்டேன்.
அதை கவனிக்காத மாதிரி வேற கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சிட்டாரு அன்புமணி.
இத்தனைக்கும் முன்னாடி தான் உட்கார்ந்திருந்தேன். ஒருவேளை, ஆபீஸ்பாய்தானே இந்த ரவுண்ட்ஸ்பையன் அப்படின்னு அலட்சியமா இரந்துட்டாரோ என்னவோ?
“சரி, தேர்தல் அறிக்கை வெளியீடு நடந்தது போன 15ம் தேதி.. இப்போ ஏன் இதைச் சொல்றே”னு நீங்கள கேக்குறது புரியுது.
இத்தனை நாள்ள, ஏதாவது பத்திரிகையில நான் கேட்ட கேள்விகளை போடுவாங்களோனு நெனச்சிருந்தேன்.. இல்லையே… அதான் நம்ம பத்திரிகையிடல சொல்லிட்டேன்.
வர்ட்டா..!
 
 

More articles

9 COMMENTS

  1. இப்படி நீங்க ஒரு மைன்ட்-ட பிக்ஸ் செய்துகிட்டு அல்லது உங்க எடிட்டரு கேள்விய தூக்கிகிட்டு இவ்வளவு தூரம் பேயிருக்கவே வேண்டாமே .. நீங்க ஒக்காங்க்த எடத்துல இருந்தே இதை எழுதி இருக்கலாம் ..

  2. அவுங்க அப்பாரு பக்கத்துல இருந்தும் ஒங்கள சும்மாவா விட்டாரு?! ஏதோ உங்களுக்கு நல்ல நேரம் இருந்துருக்கு போங்க.

  3. அவுங்க அப்பாரு பக்கத்துல இருந்தும் ஒங்கள சும்மாவா விட்டாரு?! ஏதோ உங்களுக்கு நல்ல நேரம் இருந்துருக்கு போங்க.

  4. வட தமிழ்நாடு முழுவதும் நிலத்தை கூறு போட்டு ரியல் எஸ்டேட் பண்ணி விட்டு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான சென்னை இரண்டாம் விமானத்தை வர விடாமல் தடுத்து ஏன்????.

  5. கலப்பு திருமணம் ,தர்மபுரி எம்பி. பதவியை ராஜினாமா,வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை நீக்கிடுவீங்களா என்று உன் கேள்விகளை பார்த்த எனக்கு உன் வரலாறு தெரிகின்றது,அவர் படித்தவர்,வேறு ஒருவனாக இருந்தால் தூ………..

Latest article