தஞ்சாவூர்
தஞ்சாவூரில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை ஒரு வாலிபர் பின் தொடர்ந்து வந்த்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
ஒரு நாள் பயணமாக நேற்று தஞ்சை வந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி காலையில் சரசுவதி மகால் நூலகத்தை பார்வையிட்ட பின் மாலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை தந்தார். மேலும் நேற்று பிரதோஷ தினம் என்பதால் நந்தியம்பெருமானை வழிபட்டு விட்டு பிறகு கோவிலை விட்டு வெளியே சென்றார்.
ஆளுநர் ஆர் என் ரவி சரசுவதி மகால் நூலகம், பெரிய கோவில் ஆகிய இடங்களுக்கு சென்றபோது அவர் அருகிலேயே ஒரு வாலிபர் சென்று வந்துள்ளார். ஆளுநரின் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் அவர் மீது சந்தேகம் அடைந்து, அவர் யார்? என விசாரிக்கும்படி உள்ளூர் காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
பெரிய கோவிலில் நேற்று மாலை அந்த வாலிபரை பிடித்து அழைத்துக்கொண்டு வெளியே வந்து. அவரை தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்த ஜாபர்தீன் என்பது தெரிய வந்தது.
ஜாபர்தீன் ஏன் கவர்னரை பின் தொடர்ந்து வந்தார்? என்பது குறித்து நடத்திய விசாரணையில் அவர் ஆர்வமிகுதியால் கவர்னரை பின்தொடர்ந்து சென்றதாவும், வேறு எதுவும் காரணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அவரை காவல்துறைஇனர் எச்சரித்து அனுப்பி வைத்தும் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.