ஐதராபாத்: இந்தியாவைச் சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தனது  20 ஆண்டு டென்னிஸ் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக  அறிவித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்தியாவில் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் சானியா மிர்ஸா. இவர் கடைசியாக   துபாயில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீச்சுடன் பங்கேற் றார். அதைத்தொடர்ந்து தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சானியா மிர்ஸா  ஏற்கனவே இவர் துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியின்ஷிப் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக கூறியிருந்தார். இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற போட்யில்,  இந்தியாவின் சானியா மிர்சா – அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் மோதினர். இந்தப் போட்டியில் 4-6 0-6 என்ற நேரடி செட் கணக்கில் சானியா ஜோடி தோல்வியை தழுவியது.

இதைத்தொடர்ந்து சானியா மிர்சா தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இதன் காரணமாக, அவரின் 20 ஆண்டு கால டென்னிஸ் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

ஓய்வுபெறும் சானியா மிர்ஸாவுக்கு விளையாட்டு வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்வியாடெக், ஜபேர் மற்றும் பலர் இந்திய டென்னிஸ் நட்சத்திரங்கள் அவரை வாழ்த்துகிறார்கள்.

சானியாவின் சாதனைகள்:

இந்தியாவில், டென்னிஸில் பெண்களுக்கான ஆதர்ச நாயகியாக விளங்கும் வீராங்கனை சானியா மிர்சா, 2003 இல் தனது தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையைத் தொடங்கினார், இந்த இருபது ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் பல்வேறு ‘முதல்’ சாதனைகளை நிகழ்த்திய நாயகி சானியா மிர்சா.

சானியாவின் உடல் அமைப்பு, அவரது உடை தொடர்பாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், வலுவான உடல் தகுதியுடன் இருப்பது மட்டுமே கவர்ச்சியாக கருத முடியும். மிகவும் மெலிவாக இருப்பது யாரையும் ஈர்க்காது என்று தனது பதிலை தெரிவித்துவிட்டு, தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தி  முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக வலம் வந்தார் சானியா மிர்சா.

2003ஆம் ஆண்டு சர்வதேச டென்னிஸ் கேரியரை தொடங்கிய சானியா மிர்சா, தனது 20 ஆண்டு கால டென்னிஸ் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இரண்டு தசாப்தங்களாக டென்னிஸ் விளையாடிய சானியா மிர்சா ஆறு முறை கிராண்ட ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அத்துடன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

2004ஆம் ஆண்டு இந்தியாவுக்காக முதல் முறையாக WTA பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை 17 வயதில் பெற்றார் சானியா மிர்சா. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் லீசல் ஹூபருடன் இணைந்து இரட்டையர் பிரிவில் இந்த பட்டத்தை வென்றார். இதே தொடரில் 2018ஆம் ஆண்டில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார்.

2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் இணைந்து பட்டம் வென்றார். இந்த ஜோடி இந்தியா சார்பில் முதல் முறையாக பட்டம் வென்று சாதனை புரிந்தது. இதன் பின்னர் 2012ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் கலவை இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் இணைந்து பட்டம் வென்றார்.

இதைத்தொடர்ந்து 2014ஆம் ஆண்டில் ப்ரூனோ சோரஸுடன் இணைந்து கலவை இரட்டையர் பிரிவில் யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்றார்.

2015ஆம் ஆண்டில் விம்பில்டனில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் தொடரிலும், 2016ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா ஓபன் தொடரிலும் மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார்.

2015ஆம் ஆண்டில் சார்லஸ்டானில் பெற்ற வெற்றிக்கு பின்னர் WTA ரேங்கிங்கில் முதல் இடம் பிடித்த இந்தியா வீராங்கனை என்ற சாதனை புரிந்தார் சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் 91 வாரங்கள் வரை முதல் இடத்தில் நீடித்த சானியா மிர்சா, தனது ஒட்டுமொத்த டென்னிஸ் கேரியரில் 43 முறை இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளார்.

தற்போது டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள சானியா மிர்சா, பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஆலோசகராக தனது புதிய கேரியரை தொடங்கவுள்ளார்.