டெல்லி: டெல்லி மேயராக ஆம் ஆத்மி கட்சியை ஷெல்லி ஓபராய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். உச்சநீதிமன்றம், நியமன கவுன்சிலருக்கு வாக்குரிமை கிடையாது என்று திட்டவட்டமாக கூறிய நிலையில், சுமார் 15 வருடத்துக்கு பிறகு பாஜகவிடம் இருந்து ஆம்ஆத்மி கட்சி மேயர் பதவியை கைப்பற்றி உள்ளது.

அதன்படி டெல்லி  எம்சிடி (Municipal Corporation of Delhi (MCD) மேயராக  ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய்,  துணை மேயராக அலே எம்டி இக்பால்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

டெல்லியில்  கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் நடந்த மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. இதிர்ல  ஆம் ஆத்மி பெரும்பான்மையான இடங்களில் வென்றது. இதனையடுத்து ஆம் ஆத்மி வேட்பாளர் டெல்லியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவினர் அதை நடத்த முடியாமல் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மேயர் தேர்தல் 3 முறை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது.

தேர்தல் முடிந்தவுடன் முதல் அவை கூட்டத்தில் புதிய மேயர், துணை மேயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், பாஜகவினர் நடவடிக்கையால் சுமார் 2 மாதங்களாக மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற முடியாமல் இருந்து வந்தது. இதற்கிடையில், டெல்லி கவர்னர் மூலம் நியமன கவுன்சிலர்கள் சிலர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பாஜக ஆதரவாளர்களாக கருதப்படுகிறது. இதன்மூலம் மேயர் பதவியை  தக்க வைக்க பாஜக முயற்சி செய்தது.

ஆனால், இதுதொடர்பாக ஆம்ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, தேர்தல் அலுவலராகவும், தற்காலிக அவைத் தலைவராகவும் டெல்லி துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட சத்ய சர்மா தங்களை கேட்காமல் 10 நியமன கவுன்சிலர்களை நியமித்ததாகவும், மட்டுமல்லாது அவர்களுக்கு மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இருப்பதாகவும் அறிவித்துள்ளார் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், நியமன கவுன்சிலருக்கு வாக்குரிமை கிடையாது என உத்தரவிட்டது. மேலும்,  தேர்தல் நடத்தும் தேதியை 24 மணி நேரத்திற்குள் இறுதி செய்யுமாறு கடந்த 17ம் உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் 22ம் தேதி (இன்று) நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று மீண்டும் மேயர் தேர்தல் நடத்தப்பட்டது.  சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற தேர்தலில் 250 கவுன்சிலர்கள், டெல்லி யிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 7 எம்.பிக்கள், மாநிலங்களவைக்கு தேர்வான 3 எம்.பிக்கள் மற்றும் 14 எம்எல்ஏக்கள் என மொத்தம் 274 பேர் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் 241 பேர் மட்டுமே வாக்களித்தார்கள்.

வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று டெல்லியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.