மெல்போர்ன்,

ஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் ஹங்கேரியின் திமியா பாபோஸ் – பிரான்சின் கிறிஸ்டினா மிலாடனோவிக் இணை  சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்த ஆண்டுக்கான கிரான்ட் சிலாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று மகிளர் இரட்டை பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

இதில், ஹங்கேரியின் திமியா பாபோஸ் – பிரான்சின் கிறிஸ்டினா மிலாடனோவிக் இணை, ரஷ்யாவின் ஏகதரினா மகரோவா – எலினா வெஸ்னினா இணையை எதிர்கொண்டு விளையாடிது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை பெறும் வேகத்தில் இரு தரப்பினரும் ஆக்ரோஷமாக ஆடினர். இருந்தாலும்,  திமியா பாபோஸ் – கிறிஸ்டினா மிலாடனோவிக் இணை விட்டுக்கொடுக்காமல் விளையாடி 6-4,. 6-3 என்ற நேர்  செட்டில்,  ரஷ்யாவின் ஏகதரினா மகரோவா – எலினா வெஸ்னினா இணையை  வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினர்.

திமியா பாபோஸ் – பிரான்சின் கிறிஸ்டினா மிலாடனோவிக் கூட்டாகப் பெறும் முதல் கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.