ஆஸ்திரேலியா-வின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் டெண்டுல்கர் மற்றும் லாரா ஆகிய இருவரையும் கௌரவிக்கும் விதமாக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
பெவிலியனை விட்டு வீரர்கள் மைதானத்திற்குள் நுழையும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த நுழைவாயில் கதவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோரது பெயருடன் அவர்கள் இந்த மைதானத்தில் நிகழ்த்திய சாதனை விவரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது.
SCG மைதானத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மூன்று சதங்களை அடித்து சராசரியாக 157 ரன்கள் எடுத்துள்ளதோடு இந்தியாவுக்கு வெளியில் தனக்குப் பிடித்த மைதானம் என்று சிட்னி மைதானத்தை கூறியுள்ளார்.
மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரரான பிரையன் லாரா 1993 ம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் சதத்தை சிட்னி மைதானத்தில் அடித்தார்.
இந்த இருவருக்கும் சிட்னி மைதானத்தில் கௌரவப்படுத்தியிருப்பது அவரது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.