சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகம் இடைநிறுத்தம் உணவகத்திற்கான டெண்டர் வெளியிடும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பில் உணவு இடைவெளிக்கும் நிறுத்தும் உணவகத்திற்க்கான டென்டரை வெளியிட்டுள்ளது அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது, சிசிடிவி பொருத்துதல் போன்ற பல கட்டுபாடுகளை வகுத்துள்ளது, தவறும் பச்சத்தில் கடும் நடவடிக்கை என தெரிவித்துள்ளது
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உணவகத்தில் நிறுத்தம் செய்பவதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன. இதை ஒழுங்கு படுத்துவதாக கூறிய போக்குவரத்து துறை , உணவகங்களை மாற்றி அறிவித்தது. இதிலும் பல குளறுபடிகள் எழுந்தது.
இதையடுத்து, உணவகங்களில் இலவச கழிப்பிட வசதி இருக்க வேண்டும் . பயோ கழிவறை அமைக்கப்பட வேண்டும் என்றும், உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
மேலும், உணவகத்தில் விற்கப்படும் பொருட்களின் விலை எம்.ஆர்.பி. விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும் என்றும், உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான டெண்டர் கோரப்பட்டுள்ளது.