திருவண்ணாமலை: பழமையான முருகன் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியை கல்குவாரிக்கு டெண்டர் விடுத்ததை எதிர்த்து, திருவண்ணாமலை மாவட்டத்தில், மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் மலைகளும், இயற்கை சூழ்ந்த பகுதிகளும் உள்ளன. இந்த மாவட்டத்தில் உள்ள செய்யாறு அருகே உள்ள அத்தி கிராமத்தில் பழமையான முருகன் கோவில் உள்ளது. இந்த கோயிலானது, அந்த பகுதியில் உள்ள சிறிய மலையின் உச்சியில் உள்ளது. இந்த மலையை குவாரிக்காக மாவட்ட நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது. இருகுறித்து அறிந்த அந்தப்பகுதி பொதுமக்கள், அரசின் நடவடிக்கையை கண்டித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பராமரிப்பு இன்றி காணப்படும் அந்த முருகன் கோவிலை சீரமைக்க வேண்டும் என்றும் ஏற்கனவே பல முறை கோரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில், அந்த பகுதி மக்கள், தாங்களாபகவே மலையில் ஏறி முருகன் கோயிலை சுத்தம் செய்திட முயன்றுள்ளனர்.

இதுகுறித்து தவல் அறிந்த காவல்துறையின்ர், அவர்களை தடுத்து நிறுத்தியதால்,  வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மலையடிவாரத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம்  குறித்து தகவல் அறிந்த   தாசில்தார் மூர்த்தி நேரில் வந்து, கிராம மக்களிடம் பேசினார். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.   இதை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஏற்கனவே, பழமையான முருகன் கோயில் அமைந்துள்ள மலையை டெண்டர் விடக் கூடாது என வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன் செய்யாறு உதவி கலெக்டர் கே.விமலாவிடம்  அந்த பகுதி மக்கள் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.