பயங்கரவாதிகள் மீதான பயம்: பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட மலிங்கா உள்பட 10 இலங்கை வீரர்கள் மறுப்பு!!

Must read

கொழும்பு:

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இலங்கை கிரிக்கெட் அணியில், பிரபல யார்க்கர் பந்து வீச்சாளர்  உள்பட 10 வீரர்கள், பாகிஸ்தான் அணியுடன்  விளையாட விருப்ப மில்லை என்றுகூறி, போட்டியில் இருந்து விலகுவதாக  இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வருகிற (செப்டம்பர்) 27-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை  பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தன்போது, 3 ஒருநாள் ஆட்டம், 3 டி20 ஓவர் ஆட்டத்தில் விளையாடு வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆட்டத்தில் ஆடும் வீரர்களின் விருப்பம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.  அதைத்தொடர்ந்து, பாகிஸ்தானில் நடைபெற உள்ள போட்டியில் விளையாட விரும்பவில்லை என்று இலங்கை டி20  அணியின் கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா உள்பட 10 வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து இருக்கின்றனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு, இலங்கை அணியினர்,  பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட நிலையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நாடான பாகிஸ்தானில் ஆட இலங்கை வீரர்கள் மறுத்து உள்ளனர்.

இதுபோல சர்வதேச கிரிக்கெட் அணிகளும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article