டெம்டேஷன் ஐலன்ட் எனும் நிகழ்ச்சியை கங்கனா ரனவத் தொகுத்து வழங்க இருக்கிறார்.
முன் பின் அறிமுகமில்லாத ஆண், பெண்களை தனித்தீவில் தங்க வைப்பார்கள். ஆளுக்கொரு ஜோடியை பிடித்துக் கொள்ள வேண்டும். விதவிதமான டாஸ்க்குகள் அளிக்கப்படும்.
அமெரிக்காவின் ஃபாக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் தயாரிக்கிறார்கள். கங்கனா ரனவத் இதனை தொகுத்து வழங்குகிறார். பிரபல ஓடிடி தளம் இதனை தயாரித்து, ஒளிபரப்புகிறது.
இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் பிரபலமடைந்தாலும் இந்த நிகழ்ச்சி முதலில் ஒளிபரப்பானது நெதர்லாந்தில். அங்கு பிளைன்ட் பெயித் என்ற பெயரில் ஒளிபரப்பானது. அது ஹிட்டாக, அதனை அப்படியே அமெரிக்காவில் தயாரித்து ஒளிபரப்பினார்கள்.