இன்று பிற்பகல் தற்காலிக சபாநாயகராக  பதவியேற்கிறார் செம்மலை

Must read

சென்னை:
மிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக எஸ்.செம்மலை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பதவியேற்க இருக்கிறார்.  அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழகத்திற்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக  ஆட்சியைப் பிடித்ததை அடுத்து,  முதல்வராக இன்று ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க இருக்கிறார்.
download
இந்த நிலையில் சட்டசபை தற்காலிக சபாநாயகராக எஸ். செம்மலை அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.  அதன் பிறகு  சட்டசபை கூடுகிறது. அதில்  புதிய உறுப்பினர்களுக்கு செம்மலை பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதையடுத்து சட்டசபை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.  புதிய சபாநாயகர் வரும் வரை செம்மலை சபாநாயகராக செயல்பட இருக்கிறார்.

More articles

Latest article