ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு கட்டுக்கட்டாக பணம் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்தது.
கிழக்கு கோதாவரி நல்லஜர்ல அருகே அனந்தப்பள்ளி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி மோதியதில் இந்த மினி லாரி கவிழ்ந்தது.

இதில் அட்டை பெட்டி மற்றும் சாக்கு மூட்டைகளில் கொண்டு சென்ற பணம் சிதறி விழுந்ததை அடுத்து அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பகுதி போலீசார் விரைந்து வந்து லாரியில் இருந்த ரூ. 7 கோடி பணத்தை கைப்பற்றினர்.
ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் கோடிக்கணக்கான பணத்துடன் சென்ற டெம்போ கவிழ்ந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Patrikai.com official YouTube Channel