கும்பகோணத்திற்கு அருகேயுள்ள கொட்டையூர் கோட்டீஸ்வரர் கோயில், இன்னம்பர் எழுத்தறிநாதர் கோயில், திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வர கோயில் உட்பட பல கோயில்களுக்கு சென்று வந்தோம்.  அந்த கோயில்களைப் பற்றி பார்ப்போம்.

 

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்

தஞ்சாவூரிலிருந்து காலை கிளம்பி 6.30 மணி வாக்கில் கும்பகோணம் சென்றடைந்தோம். மகாமகத் தீர்த்தவாரி கோயில்களில் ஒன்றான கும்பேஸ்வரர் கோயிலிலிருந்து எங்களது பயணம் துவக்கமானது. கும்பேஸ்வரரையும் மங்களாம்பிகையையும் தரிசித்துவிட்டுக் கிளம்பினோம். மகாமகத்திற்காக கோயிலில் திருப்பணி நடைபெற்றுவருவதைக் கண்டோம்.

1

 

கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்

அங்கிருந்து கும்பகோணம்-சுவாமிமலை சாலையிலுள்ள, தேவாரப்பாடல் பெற்ற கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். இக்கோயிலிலும் மகாமகத்திற்காக திருப்பணி நடைபெற்று வருகிறது. மகாமகத்தீர்த்தவாரி கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. இறைவனையும், இறைவி பந்தாடு நாயகியையும் பார்த்துவிட்டு கோயிலை வலம் வந்தோம்.

 

2

 

இன்னம்பர் எழுத்தறிநாதர் கோயில்

அடுத்த மிக அருகில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற இன்னம்பர் எழுத்தறிநாதர் கோயில் சென்றோம். மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக பூங்கொம்பு நாயகி, நித்தியகல்யாணி என்ற இரு அம்மன் சன்னதிகளை கண்டோம். வித்தியாசமான முறையில் அமைந்திருத்த மூலவர் விமானத்தை பார்த்தோம்

 

3a

 

 

3b

 

திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்

அங்கிருந்து தேவாரப்பாடல் பெற்ற திருப்புறம்பியம் கோயில் சென்றோம். மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக குஹாம்பிகை சன்னதியும், அடுத்து கரும்படு சொல்லியம்மை சன்னதியும் உள்ளன. தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ள தளத்திற்கு மேல் தளத்தில் சட்டநாதர் சன்னதி உள்ளது. இக்கோயிலின் கருவறை கோஷ்டத்தில் புள்ளமங்கை கோயிலில் உள்ளது போன்று மிகச் சிறிய அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் பற்றி பிறிதொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

4b

 

விஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில்

திருப்புறம்பியம் கோயில் தரிசனம் நிறைவுற்ற பின் விஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில் சென்றோம். நாயன்மார்கள் தரிசித்த இறைவனையும் இறைவி மங்கைநாயகியையும் தரிசனம் செய்தோம்.

 

5

 

5b

 

திருவைகாவூர் வில்வவனநாதர் கோயில்

அடுத்த கோயில் சுவாமிமலைக்கு அருகே அமைந்துள்ள திருவைகாவூர் வில்வவனநாதர் கோயில். வேறு எந்தத் தலத்திலும் காணாத வகையில் இங்குள்ள நந்தி அனைத்து இடத்திலும் நம்மை எதிர்கொண்டழைக்கும் (கிழக்கு நோக்கி) காட்சியைக் காணலாம்.

 

66

 

ஏரகரம் கந்தநாதசுவாமி கோயில்

அங்கிருந்து ஏரகரம் சுவாமிநாதசுவாமி கோயில் சென்றோம். சுவாமிமலைக்கு முந்தைய கோயில் என்ற சிறப்பினைக் கொண்ட கோயில். ஆதிகந்தநாதசுவாமி கோயில் என்றழைக்கப்படுகிறது. கருவறையில் லிங்கத்திருமேனி உள்ளது. மூலவர் சன்னதிக்குப் பின்புறம் ஆதிகந்தநாதசுவாமி சன்னதி உள்ளது. இச்சன்னதியில் சுப்பிரமணியர் நின்ற நிலையில் ராஜகோலத்தில் உள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டோம்.

 

7

 

முல்லைவனநாதர் கோயில்

அடுத்து சென்றது தேவாரப்பாடல் பெற்ற திருச்சத்திமுற்றம் முல்லைவனநாதர் கோயில். இக்கோயிலின் மண்டபத்தில் கருவறையின் வலப்புறம் சக்தி தழுவிய உடையார் என்ற சன்னதி உள்ளது. இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம். சக்தி முற்றம் (சக்தி உறையும் இடம்) என்பதை இறைவி, இறைவனுக்கு முத்தம் தருவாகக் கூறுவதைக் கண்டோம்.

8

 

தேனுபுரீஸ்வரர் கோயில்

அடுத்து அருகில் உள்ள, நந்தி விலகிய தலமான தேவாரப்பாடல் பெற்ற தேனுபுரீஸ்வரர் கோயில் சென்றோம். அக்கோயிலின் இடப்புறம் ஞானாம்பிகை சன்னதி உள்ளது. அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் உள்ள தூண்கள் வேலைப்பாடு உடையவனவாக உள்ளன. தேனுபுரீஸ்வரரையும், அம்மனையும்  தரிசித்துவிட்டு துர்க்கையம்மன் சன்னதி சென்றோம்.

999

 

சோமநாதசுவாமி கோயில்

அங்கிருந்து போகும் வழியில் முழையூர் தர்மபுரீஸ்வரர் கோயிலைப் பார்த்தோம். மாடக்கோயில் வடிவில் அழகாக இருந்தது. அதற்கடுத்து பார்சுவநாதசுவாமி உள்ளது. தொடர்ந்து பழையாறை சோமநாதசுவாமி கோயில் சென்றோம். எத்தனை முறை சென்றாலும் பார்க்கத் தூண்டும் கோயில். தற்போது திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குதிரை தேரை இழுத்துச்செல்லும் வடிவில் உள்ள மண்டபம் அருமையாக உள்ளது. இவ்வறான சிற்பத்தை கும்பகோணம் சார்ங்கபாணி கோயில், கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்களில் காணமுடியும்.
nnn

 

 

10 b

நாதன்கோயில்

அதற்கடுத்து நந்திபுர விண்ணகரம் எனப்படும் நாதன்கோயில் சென்றோம். ஆறு விண்ணகரங்களில் ஒன்றான இக்கோலத்தில் மூலவர் அமர்ந்த கோலத்தில் இரு தேவியருடன் உள்ளார்.

 

11

 

 

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்

நிறைவாக தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் சென்றோம். கோயிலின் முன்பு சற்றே ஓய்வெடுத்தோம். சிறிது நேரத்தில் மேகமூட்டத்துடன் மழை வருவது போன்ற நிலை ஏற்பட்டது. கோயிலுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த எங்களது பேரனை ஒரு புகைப்படம் எடுத்துவிட்டுக் கிளம்பினோம், பல கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்த மன நிறைவுடன்.

 

12

 

அன்பு சகோதர சகோதரிகளே…. குடந்தை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இந்த கோயில்களை அவசியம் ஒரு முறை தரிசித்துவிட்டு வாருங்கள்.

 

8888888