
கார்த்தி நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்கில் டப் செய்து வெளியிடுகின்றனர்.
கார்த்தி, கலையரசன், கேதரின் தெரேசா உள்ளிட்டவர்களின் நடிப்பில் மெட்ராஸ் நல்லதொரு அரசியல் படமாக அது வெளியான காலகட்டத்தில் பாராட்டப்பட்டது.
கார்த்திக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உண்டு. செப்டம்பர் மாதம் மெட்ராஸின் தெலுங்குப் பதிப்பை ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியிடுவதாக அறிவித்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். ரஞ்சித்தின் சார்ப்பட்டா பரம்பரைக்கு கிடைத்த வெற்றியே மெட்ராஸ் இப்போது தெலுங்கு பேசுவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel