ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவும் (பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த நடிகை) காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக டோலிவுட்டில் தகவல்கள் பரவி வருகின்றன.

. நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா. இவரும் நடிகை சமந்தாவும் ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், பின்னர் மனமுறிவு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து நாகசைதன்யா மற்ற நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில், தெலுங்கு நடிகை சோபிதாவுடன் அவர் நெருக்கம் காட்டி வருவதாக தகவல்கள் பரவி வந்தன. சோபிதா துலிபாலாவுடன் நாக சைதான்யாவுக்கு ஏற்பட்ட நெருக்கம் காரணமாகவே சமந்தாவை அவர் விவாகரத்து செய்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், நாக சைதான்யா மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் வகையில்தான் சைதன்யாவும், துலிபாலாவும் இடையே நெருக்கம் அதிகரித்து வந்தது. . இருவரும் ஒரே இடத்துக்கு சுற்றுலா சென்ற தனித் தனி போட்டோக்களும் வெளியாகின. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வருவதாகவும் கடந்த ஒராண்டுக்கும் மேலாக கிசுகிசுக்கள் பரவி வந்தன.
இந்த நிலையில், நாக சைதன்யா நிச்சயதார்த்தம் இன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் இன்று நடிகர் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும்நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு இறுதியில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இதுதொடர்பாக இருவரும் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]