முலுக்
தெலுங்கானா முலுக் பகுதியின் காங்கிரஸ் பெண் சட்டப்பேரவை உறுப்பினரான சீதாக்கா கடந்த 39 நாட்களாகக் காடு மலைகளில் சுமையுடன் நடந்து சென்று மக்கள் பணி ஆற்றி வருகிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் மலைகள் அடர்ந்த வனப் பகுதியில் உள்ளது முலுக் பகுதி. இங்கு ஒரு மாவோயிஸ்ட் தீவிரவாதியாக அறியப்பட்டவர் தன்சாரி அனன்யா. ஆனால் இவரை அப்பகுதி மக்களுக்கு சீதாக்கா என்னும் பெயரில் தான் அதிகம் தெரியும். இவர் அப்பகுதியில் பழங்குடிகள் மற்றும் பட்டியல் இன மக்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். சுமார் 15 வருடங்கள் தீவிர வாதியாக அறியப்பட்ட சீதாக்கா அதன் பிறகு அரசியலில் நுழைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் தற்போது அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொது செயலராக இருக்கிறார். அத்துடன் சத்தீஸ்கர் மாநில மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார். சீதாக்கா 2009 ஆம் வருடத் தேர்தலிலும் தற்போதைய 2018 ஆம் வருடத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து அங்குள்ள மலை வாழ் கிராம மக்களுக்கு உண்வுப் பொருட்கள் தடையின்றி போய்ச் சேருவதை சீதாக்கா கவனித்துக் கொள்கிறார். தனது உள்ளூர் தொடர்புகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் மூலம் உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளைப் பெரும் சீதாக்கா அதைத் தனது தொகுதியில் உள்ள 150 கிராமங்களுக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்கிறார்.
ஊரடங்கு காரணமாக ஒரு சில மலை வாழ் கிராமங்களுக்கு இவற்றை எடுத்துச் செல்ல ஆட்கள் கிடைககாத சூழல் உள்ளது. அப்போது இவரே தலையில் உணவுப் பொருட்களை சுமந்து காடு, மலைகளில் நடந்து சென்று மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். அந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது ஒரு வெளி மாநில தொழிலாளி சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சுகளுடன் செல்வதைப் போல் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் செல்வது பாராட்டு மழையை அளித்துள்ளது.
[youtube https://www.youtube.com/watch?v=mzmQNw6uUwY]