ஐதராபாத்
தெலுங்கானா அரசு 3 பிரிவாக பட்டியல் சமூகத்தினரை வகைப்படுத்தி உள்ளது.
அண்மையில். தெலுங்கானாவில் அரசு பணி மற்றும் கல்வியில் பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கப்படும் 15 சதவீத இடஒதுக்கீட்டை நியாயமாக பிரித்துக்கொள்ளும் வகையில் பட்டியல் சமூகத்தினரை வகைப்படுத்த அரசு முடிவு செய்து இதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சமீம் அக்தர் தலைமையில் குழு அமைத்தது.
இந்த குழுவினர் மாநிலத்தில் மொத்தமுள்ள 59 பட்டியல் சமூகங்களை 3 பிரிவாக வகைப்படுத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அதன்படி 15 சமூகங்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையிலும், 18 சமூகங்களுக்கு 9 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையிலும், 26 சமூகங்களுக்கு 5 சதவீதம் வழங்கும் வகையிலும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்ட நிலையில், அதை நிறைவேற்றுவதற்காக கடந்த மாதம் மசோதாவும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதை சட்டமாக்கி நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த சட்டப்படி மாநிலத்தில் இடஒதுக்கீடு அமலாகி இருப்பதாக மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார்