தொலைத் தொடர்பு செயலாளர் ஜே.எஸ். தீபக் TRAI ஜியோவிற்கு அளித்த முறைக்கேடான சலுகையைத் தட்டிகேட்டதால் பந்தாடப்பட்டார்.
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகவிளம்பரச் சலுகையை 90 நாட்கள் தாண்டியும் தொடர்ந்து வழங்க அனுமதியளித்த டிராய் (TRAI)அமைப்பை வெளுத்துவாங்கிய ஆறே நாளில் நேர்மையான அதிகாரியான ஜே.எஸ். தீபக் உடனடியாக தொலைத் தொடர்புத் துறையை விட்டே வெளியே இடமாற்றப் பட்டுள்ளார். இது உடனே அமுலுக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தொலைத் தொடர்பு பிரச்சினைகள்குறித்த கொள்கைகள் வகுக்கும் தொலைத்தொடர்பு ஆணையத்தின் சேர்மன் ஜே.எஸ். தீபக் ஆவார்.
கடந்த பிப்ரவரி 22 அன்று, 90 நாள் காலம் கடந்தும் தொடர்ந்து ஜியோ தன் அறிமுகச் சலுகையைத் தொடர டிராய் அமைப்புஅனுமதித்தது தவறு என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டு அது டிராய் அமைப்புக்கு “ நேர்மையான முறையில் இயங்கி, அரசு நிறுவனங்களுக்கு வருமானம் பாதிக்கப்படாமல் இருக்கவும், தொலைத்தொடர்புத் துறையின் சீரான வளர்ச்சிக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் செயல்படுமாறு ஒரு முறையான கடிதம் அனுப்ப ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, ஒரு நாள் கழித்து (பிப்ரவரி 23), தீபக் அவர்கள், ட்ராய் தலைவர் ஆர்எஸ் ஷர்மாவிற்கு ஒரு கடிதம் அனுப்பினார், அதில், Q2 மற்றும் Q3 காலாண்டில் காணப்பட்ட வர்த்தக வீழ்ச்சி தொடர்ந்தால், தொலைத்தொடர்புத் துறையில், செய்யப்பட்டுள்ள முதலீடு மற்றும் கடனை திரும்பச் செலுத்தும் திறன் பாதிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனால் தான் அம்பானி ஏப்ரல் ஒன்று முதல் ஜியோ சேவைக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தடாலடியாய் அறிவிக்க நேர்ந்தது.
தீபக் பின்னர், மொபைல்உலக மாநாட்டில் கலந்து கொள்ள பார்சிலோனா சென்றார். அங்கு அவர், “ இனி ஒவ்வொரு ஆண்டும் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது குறித்துப் பேசினார்” . ஆனால் தற்போது அவரை உடனடியாய் துறையை விட்டு இடமாற்றம் செய்துள்ளது மக்களிடையே மத்திய அரசின் மீதான நம்பிக்கையைக் குறைத்துள்ளது.
ஏற்கனவே, ரிலையன்ஸ் ஜியோ விளம்பரத்தில் தோன்றியதற்காகப் பிரதமர் மோடி கடுமையான விமர்சனத்தைச் சந்திக்க நேர்ந்தது.