ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகர் அருகே தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

Must read

ஜம்மு:

ம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே ட்ரால் என்ற புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சந்தேகத்துக்கிடமான அந்த வீட்டை போலீசார் சுற்றிவளைத்து ஆய்வுசெய்தனர். அப்போது அந்தவீட்டில்  ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் 5 உயர்மட்ட தலைவர்கள்
பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும்  இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்த து. இதனிடையே வீட்டில் பதுங்கியிருக்கும் 5 தீவிரவாதிகளையும் விரைவில் பிடிக்க சிறப்புப் படைப் பிரிவினர் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்

பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட புர்ஹான் வானி இந்தப்பகுதியை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது

More articles

Latest article