செகந்திராபாத்:  தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள  பல மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


செகந்திராபாத்தில் உள்ள பல மாடி கட்டிட ஸ்வப்னாலோக் வணிக வளாகத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர், 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். 12பேர் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர், இதில் 6 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர், மற்றும் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்த முதற்கட்ட விசாரனையில் இரவு 7:30 மணியளவில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது, உள்ளே சிக்கியவர்களை மீட்க முயற்சித்து வருகிறோம், இதுவரை எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது என  சையது ரபீக், தென் மண்டல கூடுதல் டி.சி.பி.

உயிரிழந்தவர்கள் தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் வணிக வளாகத்தின் அலுவலகத்தில் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இன்னும் கட்டிடத்தின் உள்ளே யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.