ஐதராபாத்: தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான புதிய தேசிய கட்சியை உருவாக்குவதாக அறிவித்துள்ள தெலுங்கான மாநில முதல்வரும், ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகரராவ், புதிய தேசிய கட்சியின் பெயரை இன்று வெளியிடுவதாக தெரிவித்து உள்ளார்.
2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வரும் தெலுங்கானா முதல்வர், தற்போதுள்ள தேசிய கட்சிகளக்கு எதிராக, விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இதுதொடர்பாக, அறிவு ஜீவிகள், பொருளாதார நிபுணர்கள், பல்துறை நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது, தேசிய அளவில் மாற்று கட்சி தொடங்குவது குறித்து கருத்து ஒற்றுமை ஏற்பட்டது. விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும். அதற்கான கொள்கைகள் வகுக்கும் பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இன்று (விஜயதசமி நாளில்,) ஐதராபாத்தில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் சந்திரசேகரராவ் புதிய கட்சியின் பெயரை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்றைய நிகழ்ச்சியில் சில எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிங்னறன. முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.
தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயர் மாற்றப்படலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.