ஐதராபாத்:

ந்திராவில் கிருஷ்ணா நீர் குறைந்து வரும் நிலையில், கோதாவரி நீரை கிருஷ்ணா நதிக்கு திரும்பும் விவகாரம் தொடர்பான ஸ்ரீசைலம் திட்டத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இரு மாநில முதல்வர்களும் கலந்துபேசி சுமூகமான முடிவை எடுத்துள்ளனர்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், ஆந்திரா, தெலுங்கான என இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில், ஆந்திராவுக்கு போதுமான அளவுக்கு கிருஷ்ணா நீர் கிடைக்காத நிலையில், கோதாவரி ஆற்று நீரை கிருஷ்ணா நதிக்கு திருப்பி இரு மாநிலங்களும் தண்ணீர் பிரச்சினையை தீர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஸ்ரீசைலம் திட்டம் கொண்டு வரப்பட்டது.  ஆனால், இதில் சமூகமான முடிவு காணாமல் கடந்த 5 ஆண்டுகளாக இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றதை தொடர்ந்து, இதற் கான முயற்சிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து நேற்று ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டியும், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவும் ஐதரா பாத்தில் உள்ள பிரகதி பவனில் பேச்சு நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் இரு மாநிலத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த பேச்சு வார்த்தையின்போது,  இரு மாநிலங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சினை, விசாயத் துக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறை மற்றும் தேவைப்படும் மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனையின் முடிவில் கோதாவரி நிதியில் இருந்து நீரை கிருஷ்ணா நதிக்கு தண்ணீரை  திருப்ப இரு முதல்வர்களும் சம்மதம் தெரிவித்தனர். இந்த பேச்சு வார்த்தை சுமூகமான நிறை வடைந்த நிலையில்,  இரு மாநில நீர்பாசன அதிகாரிகளும் இந்த திட்டத்துக்கான வரைவு அறிக்கை தயார் செய்து  ஜூலை 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

அன்றைய தினம் மீண்டும் இரு மாநில முதல்வர்களும் அமர்ந்து பேசி இறுதி முடிவு எடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆலோசனை குறித்து தெலுங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

கிருஷ்ணா அணையில் தற்போது நீர் மிகக் குறைவாக இருக்கிறது. அந்த தண்ணீர் ஆந்திராவின் ராயலசீமா, தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே தற்போது உள்ள நீரை சிறப்பான முறையில் பயன்படுத்தி, பகிர்ந்து, விவசாயத்துக்கும், தொழில் துறைக்கும், குடிநீருக்கும் இருமாநிலங்களில் பற்றாக்குறை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் கடந்த கால கசப்பான நினைவுகளை,  போனது போகட்டும் என்று ஒதுக்கி வைத்து, இருமாநில மக்களுக்கும் முடிந்த அளவு நீரை பகிர்ந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.