பாட்னா:
ராகுல் காந்தி பிரதமராவதற்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த காங்கிரஸ் பேரணியில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு உண்டு. மத்தியிலிருந்து பாஜக ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள் துணை நிற்கும். அரசியல் ரீதியான எதிரிகளை அளிக்கும் நோக்கில் மத்திய புலனாய்வுத்துறை யை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது.
ராகுல்காந்தி பிரதமராக ராஷ்ட்ரிய ஜனதா தள் ஆதரவு தரும் என்றார்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு பீகாரில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் பேரணி நடக்கிறது.
இதற்கு முன்பு 1989-ம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி தலைமையில் பேரணி நடந்தது .
ஏற்கனவே திமுக நடத்திய பேரணியில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.